» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

திங்கள் 19, ஜூலை 2021 10:27:36 AM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக் கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி இன்று அந்த அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அலுவலக பிரதான வாயிலில் டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.மக்கள் கருத்து

Thoothukudi karan laJul 19, 2021 - 02:20:01 PM | Posted IP 173.2*****

Ban sterlite

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory