» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின் மோட்டார் பறிமுதல் தொடரும் : மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

ஞாயிறு 18, ஜூலை 2021 6:40:30 PM (IST)

தூத்துக்குடியில் மின் மோட்டார்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம்  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கும் பொருட்டு கடந்த வாரத்தில் குடிநீர் விநியோகத்தின் போது மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்களால் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின்போது சட்டத்திற்கு முரணாகவும் குடிநீர்  விநியோக  விதிகளை மீறியும் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தி உறிஞ்சி எடுப்பது கண்டறியப்பட்டது. 

மேற்படி முறைகேடான செயலில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர்களிடம் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் 62 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி பணிகளுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நாளிதழ், வாட்ஸ்அப் ,மற்றும் வலைதளங்களில் மின்மோட்டார் பறிமுதல் செய்யும் பணியானது மாநகராட்சியால் கைவிடப்பட்டுள்ளது என தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கதாகும். மாநகரின் அனைத்து பகுதிகளின் கடைமடை பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக சட்ட விதிகளுக்கு முரணாக குடிநீர் குழாய் இணைப்பில் குறிப்பாக நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி  குடிநீர் வினியோகம் செய்யப்படும் கடைசி பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் உறிஞ்சி எடுக்கப்படும் செயல் சட்டத்திற்கு  முரணானதாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் மின் மோட்டார்கள் பறிமுதல் மற்றும் அபராதங்கள் விதிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற உள்ளது. 

எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மின் மோட்டார்களை உடனடியாக அகற்றி மாநகராட்சியின் குடிநீர் குழாய் துண்டிப்பு அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை தவிர்த்து கொள்ளுமாறும் சீரான குடிநீர் வினியோகம் தொடர்பாக மாநகராட்சி எடுக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாநகராட்சி நிர்வாகம்  அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

M.sundaramJul 19, 2021 - 02:06:51 PM | Posted IP 108.1*****

My house is at the end point of water supply in Kokur Road Rajiv Nagar West. We are not receiving the minimum quantity of potable water. It may be getting of water by motor by the residents of the same street. It can be checked by the corporation authorities only. Let them do their duty dilingently.

kumarJul 19, 2021 - 12:18:11 PM | Posted IP 108.1*****

muthalla thoothukudiyil nalla road podunga....

ஏரியா காரன்Jul 19, 2021 - 08:19:47 AM | Posted IP 162.1*****

பாதாள சாக்கடைல அடைப்பை சரி பண்ண மாட்டார்களாம் , பணம் புடுங்குற வேலையை பார்க்க போறாங்களாம் விளங்காத மாநகராட்சி ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:39:51 AM (IST)

பணி நேரத்தில் போதை : மின் ஊழியர் சஸ்பெண்ட்

ஞாயிறு 25, செப்டம்பர் 2022 10:35:13 AM (IST)

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory