» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் இலவச 3டி அனிமேஷன் பயிற்சி

செவ்வாய் 22, ஜூன் 2021 5:52:02 PM (IST)

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச 3டி அனிமேஷன் பயிற்சி இணையவழியில் அளிக்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி,அறிவியல் மற்றும் மானுடவியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு "பிளெண்டர்" மென்பொருள் மூலம் 3D அனிமேசன் ஒரு மாத காலம் இலவச இணையவழிப் பயிற்சி 10.07.2021 முதல் 10.08.2021 வரை நடைபெற இருக்கிறது. 

நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம், தாங்கள் விரும்பும் நேரங்களில் பயிற்சி பெறலாம். மும்பை ஐஐடி கல்வி ஆலோசகர் கபில் கடம் இணைய வழியில் பாடங்களை நடத்த இருக்கிறார். பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 09.07.2021. பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சியின் நிறைவில் E-Certificate வழங்கப்படும். பதிவு செய்வதற்கான லிங்க்: http://bit.ly/Necshblender மேலும் தொடர்புக்கு www.nec.edu.in என்ற இணையதளத்திலும், ️9042203328, 9994697362 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory