» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது : மினி வேன் பறிமுதல்

செவ்வாய் 22, ஜூன் 2021 10:55:37 AM (IST)விளாத்திகுளம் அருகே ரேசன் அரிசி கடத்தியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், மினி வேன் மற்றும் 50 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில், எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுப்படி  அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிர ரோந்து மற்றும்  வாகன சோதனை  நடைபெற்று வருகிறது. அதன்படி  விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் ஆற்றங்கரை கிராமத்தில் இன்று விளாத்திகுளம் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதும், அவற்றை சட்டவிரோதமாக கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த வாகன ஓட்டுனரான கயத்தாறு, அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (29) என்பவரை கைது செய்து,  மினி வேன் வாகனத்தையும், 50 மூட்டை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து  தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory