» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் திருமணம் செய்த இளம்பெண் உட்பட 2பேர் தற்கொலை : சார் ஆட்சியர் விசாரணை!

செவ்வாய் 22, ஜூன் 2021 10:26:01 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் காதல் திருமணம் செய்த இளம்பெண் உட்பட 2பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகேயுள்ள தெற்கு கோனார் கோட்டை கிராமம், நடுத் தெருவைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவரது மனைவி சுப்புலட்சுமி (25), இந்த தம்பதியருக்கு கடந்த 2015ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சுப்புலட்சுமி நேற்று தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் வழக்குப் பதிவு செய்துள்ளார். கோவில்பட்டி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

மற்றொரு சம்பவம் 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜர் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் பிரதாப ராஜ். இவரது மனைவி உஷா ராணி (31). இந்த தம்பதியர் கடந்த 5 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் உஷா ராணி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் வழக்குப் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

sudalaiJun 22, 2021 - 03:43:46 PM | Posted IP 108.1*****

Enquiry Officer name wrong

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory