» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம்

செவ்வாய் 22, ஜூன் 2021 8:00:36 AM (IST)

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. 

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம்பாறை பஞ்சாயத்து தலைவர் ரா.ரத்தின வேல் தலைமையில்  வார்டு உறுப்பினர்கள் ஆர்.பூமாரி, எஸ்.கருப்பசாமி, தி.மு.க. கிளை செயலாளர் எஸ்.முத்து பாண்டி, இலுப்பை யூரணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உத்தண்டு ராமன் ஆகியோர் நேற்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.  கொடுக்கம்பாறை பஞ்சாயத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பியவாறு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தத்திடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொடுக்காம்பாறை ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனி நபர்களுக்கு குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிசன் திட்டத்தில் விஜயாபுரி மற்றும் கொடுக்காம் பாறை கிராமங்களுக்கு 578 தனி நபர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர், விஜயாபுரி கிராமத்தில் பணிகள் முழுமையாக நிறை வேற்றாமல் அதற்குரிய தொகையை எடுக்க கையெழுத்து போடும்படி கேட்டார். 

ஆனால், நான் முழுமை யாக பணி நிறைவு செய்ய வேண்டும். அதனை சம்பந்தப் பட்ட பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கொடுக்காம் பாறை ஊராட்சி மக்களுக்கு தனி நபர் குடிநீர் திட்டத்தை மத்திய மாநில சட்டப்படி ஒவ்வொரு தனி நபருக்கும் குடிநீர் வழங்கிய பின்பு தான் பணம் வழங்கு வதற்கு பரிந்துரை செய்வேன் என்று தெரிவித்தேன். அதனால் எங்கள் ஊராட்சியில் தனி நபர் குடிநீர் திட்டத்தை செயல் படுத்தாமல் பணியை நிறுத்தி விட்டார். 

இது குறித்து நான் கடந்த பிப்ரவர் 9-ந் தேதி மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்துள் ளேன். அதன் பின்னரும் பணிகள் தொடங்க வில்லை. எனவே, அரசு அனுமதித் துள்ளபடி மத்திய அரசின் ஜல்ஜீவன் மிசன் திட்டத்தின்படி அனுமதித் துள்ள தனி நபர்களின் வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த கோரிக்கை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 28-ந்தேதி ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory