» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியிலிருந்து இயங்கிய நான்கு ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வேக்கு சிபிஎம் கண்டனம்

சனி 19, ஜூன் 2021 9:19:47 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து இயங்கிய நான்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கு தென்னக ரயில்வேக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியிலிருந்து ஓகா விரைவு ரயில், கோயம்புத்தூர் இணைப்பு ரயில், குருவாயூர் இணைப்பு ரயில். தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் ஆகிய நான்கு ரயில்கள் கடந்த இரண்டு வருடங்களாக கரோனாவை காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் (20.06.2021) அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

ஆனால் தூத்துக்குடியிலிருந்து இயங்கிய ரத்து செய்யப்பட்ட நான்கு ரயில்களும் இயங்கும் என அறிவிக்கப்படவில்லை. தென்னக ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடியை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்ட தலைநகராமாகவும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் தொழில் நகராகமாவும் விளங்குகிறது.  இந்தியாவில் உள்ள ஏழு பெரிய துறைமுக நகரங்களுள் தூத்துக்குடியும் ஒன்றாகும். 

தூத்துக்குடி துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் சாதனை புரிந்து வருகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள வணிகர்கள் தூத்துக்குடி வந்து செல்வதற்கு, தூத்துக்குடி, கோயம்புத்தூர் இணைப்பு ரயிலை பயன்படுத்தி வந்தனர். தூத்துக்குடி நீர்வழி போக்குவரத்தும், விமான போக்குவரத்தும், நான்கு வழி சாலைகளும் உள்ள மாவட்டமாகும்.

இவ்வளவு வளர்ந்த வாய்ப்புள்ள தூத்துக்குடியிலிருந்து ரயில் போக்குவரத்து என்பது மிக குறைவாகவே உள்ளது. தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகிறது. இவ்விரு ரயில்களிலும் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களை அனுமதிப்பது இல்லை. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியிலிருந்து ஓகாவிற்கும் அங்கிருந்து தூத்துக்குடிக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வந்தது.  தூத்துக்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு  இணைப்பு ரயில், தூத்துக்குடி, குருவாயூர் இணைப்பு ரயில், தூத்துக்குடியிலிருந்து திருநேல்வேலி வழியாக திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கும் பாசஞ்சர் ரயில் இணைக்கப்பட்டு வந்தது. இந்த நான்கு ரயில்களும் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட ரயில்கள் இயங்க வில்லை.

தூத்துக்குடியிலிருந்து சொற்;ப எண்ணிக்கையில் இயங்கி வந்த ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசும் தென்னக ரயில்வேயும் திட்டமிட்டு தூத்துக்குடியை புறக்கணிக்கும் செயலாகும். தென்னக ரயில்வே நிர்வாகம் நாளை முதல் (20.06.2021) அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயங்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தூத்துக்குடியிலிருந்து ஏற்கனவே இயங்கி வந்த நான்கு ரயில்களும் இயங்கும் என அறிவிப்பு இல்லை. தென்னக ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தூத்துக்குடி மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக ரத்து செய்யப்பட்ட நான்கு ரயில்களும் இயங்குவதற்கு அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையெனில் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory