» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை திட்டப்பணி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

சனி 19, ஜூன் 2021 9:09:29 PM (IST)



புன்னக்காயல் - ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டும் பணிகளை  அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புன்னக்காயல் கிராமப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டும் பணிகள் துவக்க நிகழ்ச்சி மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டும் பணிகள் துவக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பனை கட்டும் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: திருவைகுண்டம் வட்டம் புன்னக்காயல் மற்றும் சேர்ந்த மங்களம் கிராமங்களுக்கு குறுக்கே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ரூ.46 கோடியே 14 இலட்சம் மதிப்பில் கடைமடை தடுப்பு அணைகள் கட்டப்படுகிறது. இதன் மூலம் கடல் நீர் உள்வாங்காமல் நிரந்தர கட்டுமானமும் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில் கிணற்றடி நீர் உயர்ந்திடும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

இதைப்போலவே, ஆழ்வார் திருநகரி மற்றும் ஆழ்வார்தோப்பு கிராமங்களுக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 14 இலட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் இன்று துவக்கப்படுகிறது. இதன் மூலம் ஆழ்வார்திருநகரி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று கிணறுகளுக்கு தேவையான நீர் கிடைக்கும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இத்திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள 1522 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஹர்சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் உமரிசங்கர், முக்கிய பிரமுகர்கள் எஸ்.ஜெ. ஜெகன், நவீன்குமார், அருணாசலம், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை, உதவி பொறியாளர்கள் பத்மநாபன் ரமேஷ், புன்னக்காயல் ஒன்றியக் குழுத் தலைவர் தினகர், புன்னக்காயல் ஊராட்சித் தலைவர் சோபியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory