» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மணல் திருடிய 3பேர் கைது : ஜேசிபி இயந்திரம், லாரி பறிமுதல்!

சனி 19, ஜூன் 2021 4:29:39 PM (IST)

தூத்துக்குடி அருகே குளத்தில் மணல் திருடிய 3பேரை போலீசார் கைது செய்து, ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் மணலை பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது எல்லைநாயக்கன்பட்டி குளத்தில், உரிய அனுமதியின்றி குளத்தில் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி மூலம் சரல் மணல் அள்ளிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நம்பி மகன் சங்கரலிங்கம் (40), சாயர்புரத்தைச் சேர்ந்த செந்தில் மகன் இசக்கிராஜா (26) மற்றும் பொட்டலூரணியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், மேலும் அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் இரண்டு யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory