» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரியை கழுத்தை அறுத்துகொல்ல முயற்சி : வாலிபர் கைது

சனி 19, ஜூன் 2021 10:19:33 AM (IST)

தூத்துக்குடியில் வியாபாரியை கழுத்தையறுத்து கொல்ல முயன்றதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது தந்தையை தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 9வது தெருவில் ஒரு காம்பவுண்ட் வீட்டில் பால்பாண்டி மகன் ரவி (49) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியும் குழந்தைகளும் வேறு வீட்டில் வசித்து வருகின்றனர். ரவியின் மகன் ஆதீஷ் வேலை முடித்து தினமும் மதியம் 2 மணிக்கு மேல் சென்று தந்தையை அவரது வீட்டிற்குச் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அதே காம்பவுண்டில் குடியிருந்து வந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (24) மற்றும் அவரது தந்தையான கருப்பசாமி (50) ஆகியோர் காம்பவுண்டு கேட்டை பூட்டுப்போட்டு பூட்டி வைத்துள்ளனர். 

அதை திறந்து விடுவதற்கு நேரமாவதால் காம்பவுண்டு வாசலை பூட்ட வேண்டாம் என ரவி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக நேற்று (18.06.2021) இரவு கருப்பசாமியும், அவரது மகன் மாரியப்பனும் ரவியை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் ரவியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேற்படி கருப்பசாமி மற்றும் அவரது மகன் மாரியப்பனை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் தலைமையில் தனிப்பிரிவு தலைமைக் காவலர் பூலையா நாகராஜ், முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் இன்று காலை தூத்துக்குடி வட்டக்கோவில் சந்திப்பில் சம்மந்தப்பட்ட எதிரியான கருப்பசாமி மகன் மாரியப்பன் (24) என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கருப்பசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory