» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 4 பேர் கைது

வெள்ளி 18, ஜூன் 2021 8:55:00 PM (IST)



தூத்துக்குடியில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 29 வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அனைத்து உட்கோட்டங்களிலும், அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற அனைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (17.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டக்கடை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய அந்தோணி சகிலன் (24), குருஸ்புரம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24), மட்டக்கடை வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (25) மற்றும் எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சேர்ந்த சகாயராஜ் மகன் சந்தனகுமார் (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 29 கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும் நேற்று தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் ரவுடித்தனம் செய்து, ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படையினர் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் மரிய அந்தோணி சகிலன் மீது தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், மத்தியபாகம், சிப்காட் மற்றும் ஏரல் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 11 வழக்குகளிலும், மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் மீது தூத்துக்குடி வடபாகம், சிப்காட் மற்றும் தெர்மல்நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொள்ளை, கொலை மிரட்டல், உட்பட 8 வழக்குகளிலும், சிம்சன் மீது தூத்துக்குடி வடபாகம், தூத்துக்குடி தென்பாகம், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உட்பட 10 வழக்குகளில் ஈடுபட்டதும் குறிப்பிடதக்கது. ரவுடிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிக்காரன்Jun 18, 2021 - 10:18:09 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மட்டக்கடைச் சந்தியில் காவல்துறையினர் வாகனச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடிக்காரன்Jun 18, 2021 - 10:14:05 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மட்டக்கடைச் சந்தியில் காவல்துறையினர் தினமும் வாகனச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

தூத்துக்குடிக்காரன்Jun 18, 2021 - 10:11:42 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி மட்டக்கடைச் சந்தியில் காவல்துறையினர் தினமும் வாகனச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பல குற்றங்களைத் தடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory