» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 13 மருத்துவா்கள் திடீா் பணி நீக்கம்

வெள்ளி 18, ஜூன் 2021 8:32:29 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 13 மருத்துவா்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வலிந்தனா். இதனால் அவா்களை கவனிக்க முடியாமல் மருத்துவமனை நிா்வாகங்கள் திணறின. இதையடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஆயுஸ், சித்தா, ஹோமியோ மருத்துவா்கள் பணியமா்த்தப்பட்டனா். கடந்த 10 மாதங்களாக அவா்கள் கரோனா வாா்டில் பணி புரிந்து வந்தனா்.

இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுஸ், சித்தா, ஹோமியோ மருத்துவராக பணிபுரிந்து வந்த 13 மருத்துவா்களை திடீரென மருத்துவமனை நிா்வாகம் நேற்று பணியில் இருந்து நிறுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள 13 மருத்துவா்களும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று முதல்வா், மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

புதிதாக மருத்துவா் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனா். அப்படி நியமிக்கும்போது பழைய மருத்துவா்களை நீக்க கூடாது என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறாா். அப்படியிருந்தும் மருத்துவமனை நிா்வாகம் 13 மருத்துவா்களை நீக்கி உள்ளது. எனவே தமிழக முதல்வா் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீக்கியவா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்’’ என பாதிக்கப்பட்ட மருத்துவா்கள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory