» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.5லட்சம் பேருக்கு தடுப்பூசி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

திங்கள் 14, ஜூன் 2021 3:32:29 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 1,50,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலக்கூட்டுடன்காடு ஊராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று (14.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 1,50,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு 6000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை எல்லா பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுகாதார துறையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடுப்பூசி நமக்கு வந்துகொண்டு இருக்கிறது. 

தடுப்பூசி போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். கரோனா இல்லாத நிலைய உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் நோக்கம் ஆகும். எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், பில்லா ஜெகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், ஹரிபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெனிபர்வித்யா, சென்ட் ஜோசப் பள்ளி முதல்வர் பாதர் ரூபர்ட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory