» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்

திங்கள் 14, ஜூன் 2021 12:27:37 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 23பேருக்கு, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

கடந்த 13.06.2021 அன்று திருச்செந்தூர் தாலுகா எள்ளுவிளை பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4,60,000 மதிப்பிலான சுமார் 425 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி எதிரிகள் இருவரை கைது செய்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வளார் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் கனகராஜ், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய தலைமை காவலர் சுடலைமுத்து, முதல்நிலை காவலர் சொர்ணராஜ், காவலர்கள் மிகாவேல் மற்றும் சுடலைமணி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 09.06.2021 அன்று கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5,00,000 மதிப்பிலான 437 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றியும் மற்றும் கழுகுமலை பகுதியில் 20 லிட்டர் சாராய ஊரலை கைப்பற்றி எதிரிகள் 3 பேரை கைது செய்த கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி, உதவி ஆய்வாளர் காந்திமதி, ஜோசப், தலைமைக் காவலர் சுப்புராஜ், முதல்நிலை காவலர்கள் சுரேஷ், ரமேஷ், காவலர்கள் முத்துராமன் மற்றும் பால் தினகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 13.06.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசன்குளம் பகுதியில் 100 லிட்டர் சாராய ஊரல் மற்றும் கொற்கை பகுதியில் 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றிய ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, தலைமை காவலர் புதியவேல், முதல் நிலை காவலர்கள் தனிப்பிரிவு சரவணன் மற்றும் மாரியப்பன் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 11.06.2021 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2ம் கேட் பகுதியில் பணியில் இருக்கும் போது பெங்களுர் - தூத்துக்குடி வந்த ஒரு ரயிலில் இருந்து இறங்கிய எதிரியை கைது செய்து அவர் வைத்திருந்த கர்நாடகா மாநில மதுபானம் 27 பாக்கெட்டுகள் கைப்பற்றிய தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் செல்வராஜ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

முத்தையாபுரம் காவல் நிலைய பகுதியில் ஊரடங்கு காலத்தில் சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த சுமார் 17 வயது சிறுவனுக்கு தனது கணவருடன் சேர்ந்து தனது வீட்டிலிருந்து சுமார் 2 வார காலத்திற்கு மேலாக 3 வேளையும் உணவு வழங்கிய முத்தையாபுரம் காவல் நிலைய பெண் காவலர் தமிழ்செல்வி என்பவரின் மெச்சத்தகுந்த பணிபுரிந்தமைக்காகவும், சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory