» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு : பாஜகவினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 13, ஜூன் 2021 2:41:38 PM (IST)



டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் ஜூன் 14-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கருப்புச்சட்டை அணிந்து, டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வீடுகளின் முன்பு போராட்டம் நடத்திய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறப்பது அதிர்ச்சியாக, வேடிக்கையாக இருக்கிறது. எனவே ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. 

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி 13-ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில்,   பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் அவர் வீடு முன்பு நின்று மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி தனது குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில், மாவட்ட செயலாளர் மான்சிங், கிழக்கு மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி  டூவிபுரம்   வீட்டு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது துணைவியார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாதேவி ஆகியோர் தங்களது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா தொண்டர்கள் நிர்வாகிகள் தங்களது வீட்டு முன்பு பாதகை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


மக்கள் கருத்து

K.ganeshanJun 13, 2021 - 07:01:41 PM | Posted IP 108.1*****

ஒரு நல்ல காரணத்திற்காக நல்ல கிளர்ச்சிகள். வரவேற்பு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory