» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமுதாய சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதல்வரின் விருது : விண்ணப்பங்கள் வரவேற்பு

ஞாயிறு 13, ஜூன் 2021 9:31:55 AM (IST)

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றுபவா்கள் முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக். வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ. 50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில், அதாவது 1.4.20 முதல் 31.03.21 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். 

அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in இணையதளத்தில் உள்ளது. ஜூ 30 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் இணை தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

adaminJun 14, 2021 - 05:11:30 PM | Posted IP 108.1*****

kaasu irukkanum mothalla athukku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory