» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனாவால் மேலும் 8பேர் உயிரிழப்பு : புதிதாக 338 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!

வெள்ளி 11, ஜூன் 2021 9:59:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில், 338 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  நோய் பாதிப்பால் மேலும் 8பேர் உயிரிழந்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 338 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 51 ஆயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 562 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 46 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது. 

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50, 64, 42, 36 வயது ஆண்கள், தனியாா் மருத்துவமனையில் 67 வயது ஆண், 60 வயது பெண், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 42 வயது பெண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 65 வயது ஆண் ஆகிய 8 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 4,552 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கைதிக்கு கரோனா: 

கோவில்பட்டி முத்துநகரைச் சோ்ந்த ஆறுமுகநயினாா் மகன் முத்துராமலிங்கம் (44) திருட்டு வழக்கில் கிழக்கு காவல் நிலைய போலீஸாரால் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாக கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes





Thoothukudi Business Directory