» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

வெள்ளி 11, ஜூன் 2021 9:46:56 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 12.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் மாதிரி சேகரிப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் மாதிரி சேகரிப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் மேலதட்டபாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, பி.எஸ்.பி. நகர் கோரம்பள்ளம், நாட்டார்குளம், விட்டிலாபுரம், காசிலிங்கபுரம், முருகன்புரம், செய்துங்கநல்லூர், சந்தையடியூர், நளன்குடி, நளராஜபுரம், சுந்தரபாண்டியபுரம், முக்காணி தெற்கு, முக்காணி வடக்கு, முக்காணி ரவுண்டானா, மன்னராயன்தட்டு, கொம்புகாரன்பொட்டல், கண்ணாடிவிளை, சுல்தான்புரம், சிவலூர், கொட்டாவிளை, முருகன் காலனி, தேரிகுடியிருப்பு-காயாமொழி, ராமநாதபுரம்-காயாமொழி, தெற்கு தெரு-காயாமொழி, காயல்பட்டிணம் பேரூராட்சி, ஹாஜி அப்பா தைக்கா தெரு, அழகாபுரி தெற்கு தெரு, சீதக்காதி நகர், 

பிலோமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், தெற்கு கோட்டூர், ராஜபதி, நாலுமாவடி, ஓடக்கரை, புன்னக்காயல், வரண்டிவேல், வடக்கு ஆத்தூர், சுகநகரம், சிவன்குடியிருப்பு, பிச்சிவிளை, பெருமாள்புரம், இந்திராகாலனி, சமத்துவபுரம், புதுகாலனி, ராஜாபுதுக்குடி, காலம்பட்டி, வானரமுட்டி, சன்னதுபுதுக்குடி, சிதம்பரபட்டி, ஆறுமுகநகர், மீரான்பாளையம், கீழ விளாத்திகுளம், கே.சுப்பிரமணியபுரம், பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சோழமலையன்பட்டி, ராமநாதபுரம், மேலபாண்டியாபுரம், மருதன்வாழ்வு, முறம்பன், ரெட்டியாபட்டி, தவசிலிங்கபுரம், சென்ட்ராயபுரம், கவுண்டன்பட்டி, சக்கனாபுரம், குஞ்சையாபுரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் மேலதட்டபாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, பி.எஸ்.பி. நகர் கோரம்பள்ளம், நாட்டார்குளம், விட்டிலாபுரம், காசிலிங்கபுரம், முருகன்புரம், செய்துங்கநல்லூர், சந்தையடியூர், நளன்குடி, நளராஜபுரம், சுந்தரபாண்டியபுரம், முக்காணி தெற்கு, முக்காணி வடக்கு முக்காணி ரவுண்டானா, மன்னராயன்தட்டு, 

கொம்புகாரன் பொட்டல், கண்ணாடிவிளை, சுல்தான்புரம், சிவலூர், கொட்டாவிளை, முருகன் காலனி. தேரிகுடியிருப்பு-காயாமொழி, ராமநாதபுரம்-காயாமொழி, தெற்கு தெரு-காயாமொழி, காயல்பட்டிணம் பேரூராட்சி, ஹாஜி அப்பா தைக்கா தெரு, அழகாபுரி தெற்கு தெரு, சீதக்காதி நகர், பிலோமி நகர், அடைக்கலாபுரம், ராணிமகாராஜபுரம், தெற்கு கோட்டூர், ராஜபதி, நாலுமாவடி, ஓடக்கரை, புன்னக்காயல், வரண்டிவேல், வடக்கு ஆத்தூர், சுகநகரம், சிவன்குடியிருப்பு, பிச்சிவிளை, பெருமாள்புரம், இந்திராகாலனி, சமத்துவபுரம், புதுகாலனி, பாளையாபுரம், ஆவுடையம்மாள்புரம், சி.ஆர்.காலனி, போலீஸ் லைன்-விளாத்திகுளம், மீனாட்சிபுரம், இராமச்சந்திரபுரம், சண்முகபுரம், அய்யப்பாபுரம், குலசேகரநல்லூர், பள்ளிவாசல் பட்டி, குமரலிங்கபுரம், டி.சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes






Thoothukudi Business Directory