» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல் : 2 பேர் கைது

வெள்ளி 11, ஜூன் 2021 9:36:51 PM (IST)

கோவில்பட்டியில் ரயிலில் சட்டவிரோதமாக  மது பாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயிலில் கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தபோது, கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையிலான போலீசார் பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலில் மது பாட்டில்கள் கடத்தி வந்த கோவில்பட்டி அருகே உள்ள சிதம்பரம் பட்டி நடுத் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் மணிகண்டன் (32) மற்றும் வாசுதேவ நல்லூர் பழைய ரஸ்தா தெருவைச் சேர்ந்த மீரா மைதீன் மகன் பீர்முகம்மது (54) ஆகிய 2பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory