» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நலிவடைந்தவர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் : அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்

வெள்ளி 11, ஜூன் 2021 9:26:52 PM (IST)



தூத்துக்குடி, கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்டரங்கம் மற்றும் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (11.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு, தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 100 நபர்களுக்கும், கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 50 நபர்களுக்கும் என மொத்தம் 150 நபர்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பதவி ஏற்ற நாளில் இருந்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களின் தீவிர நடவடிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் ஏற்படாதவாறு வெளி மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமும், தமிழகத்தில் உற்பத்தியை அதிகரித்தும் சிறப்பான நடவடிக்கை எடுத்து தீர்த்து வைத்தார்கள். இதன்மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தீவிர நடவடிக்கையால் தற்போது 1600, 1700 வரை இருந்த தொற்று 300க்கும் கீழாக குறைந்துள்ளது. இருப்பினும் நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா தொற்றினால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகையும் 18 வயது வரை படிப்பு செலவு அனைத்தையும் அரசு ஏற்கும் எனவும், குழந்தைகளின் காப்பாளருக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்கள். அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக நலத்துறை மூலம் அவர்களுக்கு ரூ.2000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தாக்கம் நமது மாவட்டத்தில் விரைந்து குறைந்து வந்தாலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கரோனா இல்லாத நிலையை உருவாக்கிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் பிச்சை, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், நகராட்சி ஆணையர் ராஜாராம், கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மணிகண்டன், உதவி மகளிர் திட்ட அலுவலர்கள் பாலசுந்தரம், சாமதுரை, மல்லிகா, முக்கிய பிரமுகர்கள் கருணாநிதி, முருகேசன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory