» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.2 லட்சம் மதிப்புள்ள லாரி டயர்கள் திருடியவர் கைது

வெள்ளி 11, ஜூன் 2021 8:26:41 PM (IST)கயத்தாறு பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள டிஸ்குடன் கூடிய 8 லாரி டயர்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். டயர்கள் மற்றும் லோடு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசன்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த அங்கையா மகன் ராமர் (32) என்பவர் கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் ஜே.சி.பி மற்றும் டிப்பர் லாரி அலுவலகம் வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 06.08.2020 அன்று மேற்படி லாரி ஆபிஸ் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் லாரியில் உள்ள லாரி டயர்களை டிஸ்க்குடன் கழற்றி திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ராமர் 21.11.2020 அன்று அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமைக் காவலர் முருகன், முதல் நிலைக் காவலர் ஸ்ரீராம், காவலர் கணேஷ், ஊர்க்காவல் படை வீரர் செல்லத்துரை ஆகியோர் அடங்கிய போலீசார் தெற்கு இலந்தக்குளத்தில் வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்புகள் இருக்குமிடம் அருகே ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகன் (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், மேற்படி 8 லாரி டயர்களை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடியில் அவர் வீட்டிற்கு பின்பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் மற்றும் டயர்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory