» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 11, ஜூன் 2021 11:45:45 AM (IST)பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஸ்ரீனிவாசா பெட்ரோல் நிலையம் முன்பு  காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர்  மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி, முன்னாள் மகளிர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கனியம்மாள், நிர்வாகிகள் கோபால், பிரபாகரன், ஜெயசந்திரன், கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் பாண்டியன் பல்க் அருகே முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மண்டல துணைத் தலைவர் நேரு, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து விஜயா,  மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், நிர்வாகிகள் நம்பி சங்கர், நாராயணசாமி, ஜெயமணி, சேவியர் மிஷியர், ரூஸ்வெல்ட், முத்து, ரமேஷ், சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதுபோல்,தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் கருத்து

kanieJun 11, 2021 - 05:46:26 PM | Posted IP 108.1*****

அண்ணன் பெருமாள்சாமி அவர்கள் இந்த கட்சியில் இருந்து அதிமுக சென்று, அமமுக சென்று, பாஜக சென்று வென்று மீண்டும் வந்துள்ளார். இங்காவது இருப்பாரா அல்லது

kanieJun 11, 2021 - 05:45:21 PM | Posted IP 108.1*****

அண்ணன் பெருமாள்சாமி அவர்கள் இந்த கட்சியில் இருந்து அதிமுக சென்று, அமமுக சென்று, பாஜக சென்று வென்று மீண்டும் வந்துள்ளார். இங்காவது இருப்பாரா அல்லது

kumarJun 11, 2021 - 01:22:02 PM | Posted IP 162.1*****

atchiku vanthavudan petrol diesel vilayai kuraippen endru kooriya thiru stalin avargal athai niraivetruvar endru nambikayudan ethirparkirom...

தன லட்சுமி முத்துக்கருப்பன்Jun 11, 2021 - 12:20:12 PM | Posted IP 108.1*****

அண்ணன் பெருமாள் சாமி அவர்களின் தேசிய பணி சிறக்க வாழ்த்துகிறேன்... இந்நாளில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் அடிப்படை தொண்டராக இருந்து பணியாற்றி வருவது எங்களை போன்ற தொண்டர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது... அண்ணனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory