» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

வியாழன் 10, ஜூன் 2021 9:13:57 PM (IST)

காயல்பட்டினத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் தலைமையிலான போலீசார் இன்று (10.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது காயல்பட்டினம் சித்தன் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நைனார் தெருவைச் சேர்ந்த ஜூனோஸ் மகன் அகமது முகைதீன் (எ) அஷ்ரப் (55), காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த முகமது உமர் மகன் முகைதீன் அப்துல் காதர் (46) மற்றும் மருத்துவ தெருவைச் சேர்ந்த அப்துல் கபூர் மகன் உமர் (60) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டுகளும் ரூபாய் 12,230/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory