» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா குறைந்தது: அகழாய்வு பணி தொடங்கியது!

வியாழன் 10, ஜூன் 2021 9:06:22 PM (IST)

கரோனா பரவல் குறைந்ததால் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது.

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளையில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. தொடர்ந்து ஏரல் அருகே கொற்கையிலும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.

ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.  கொற்கையில் பழங்கால செங்கல் கட்டுமான அமைப்பும், சங்கு அறுக்கும் தொழிற்சாலையும் மற்றும் ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்ததின் காரணமாக, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்ததால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதையடுத்து ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் மீண்டும் அகழாய்வு பணிகள் நேற்று தொடங்கின. அங்கு தொல்லியல் துறையினர் பல்வேறு இடங்களிலும் பள்ளங்களை தோண்டி, அகழாய்வு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், ‘ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அகழாய்வு பணிகளை நிறைவு செய்யும் வகையில், பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம்’ என்று தெரிவித்தனர்.

இதுெதாடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விைரந்து தொடங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால ெபாருட்கள் கண்டறியப்பட்ட கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட 37 இடங்களிலும் அகழாய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory