» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

வியாழன் 10, ஜூன் 2021 8:20:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (11.06.2021) அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் மாதிரி சேகரிப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 11.06.2021 அன்று காய்ச்சல் பரிசோதனை மற்றும் மாதிரி சேகரிப்பு முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் சோரீஸ்புரம், ஸ்ரீனி நகர், வர்த்தகரெட்டிபட்டி, கைலாசபுரம், எஸ்.எஸ் காலனி, பொட்டல்காடு, வல்லக்குளம், புளியங்குளம், விளாத்திகுளம், சேதுராமலிங்கபுரம், கீழசெக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், கீழ்ஆழ்வார்தோப்பு, நடுஆழ்வார்தோப்பு, மேலஆழ்வார்தோப்பு, இடையர்காடு கிழக்கு, இடையர்காடு மேற்கு இடையர்காடு வடக்கு, 

ஆலடியூர் பெருங்குளம், நடூர் பெருங்குளம், ஓடையடியூர் பெருங்குளம், பதுவை நகர், வடக்கூர், பரமன்குறிச்சி கஸ்பா, பிள்ளையார் கோவில் தெரு, வள்ளியம்மாள்புரம், செம்மறிகுளம், நல்லூர், வடக்கு நல்லூர், நாககன்னியாபுரம், காயல்பட்டிணம் நகராட்சி, கே.டி.எம்.தெரு, கொச்சியார் தெரு, குத்துக்கல் தெரு, கீழசண்முகபுரம், கீழநாவ்வலடிவிளை, பாரதி நகர், ஆறுமுகநேரி, மாணிக்கவாசகபுரம், இம்மானுவேல் தெரு, நாசரேத், வடக்கு ஆத்தூர், குரும்பூர், காந்திநகர், மூக்குப்பேறி, மெர்ச்சன்ட் நகர், பாட்டாக்கரை, நல்லூர், நடுவக்குறிச்சி, கொம்பன்குளம், கலுங்குவிளை, தாமஸ் நகர், எஸ்.எஸ்.நகர், 

பெருமாள்பட்டி, வாகை தாவூர், வாகைகுளம், வெங்கடேஸ்வரபுரம், குருமலை, கட்டாலங்குளம், சரவணபுரம், துளசி பட்டி, மந்திக்குளம், கமலாபுரம், குமரெட்டியாபுரம், பனையூர், மேட்டுப்பனையூர், முள்@ர், அய்யர்பட்டி, கவர்னகிரி, வெளவால்தொத்தி, புதுப்பட்டி, சிவலார்பட்டி, சுப்புலாபுரம், காடல்குடி, மிட்டாவடமலாபுரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் சோரீஸ்புரம், ஸ்ரீனி நகர், வர்த்தகரெட்டிபட்டி, கைலாசபுரம், எஸ்.எஸ் காலனி, பொட்டல்காடு,வல்லக்குளம், புளியங்குளம், விளாத்திகுளம், சேதுராமலிங்கபுரம், கீழசெக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், கீழ்ஆழ்வார்தோப்பு, நடுஆழ்வார்தோப்பு, மேலஆழ்வார்தோப்பு, இடையர்காடு கிழக்கு, இடையர்காடு மேற்கு இடையர்காடு வடக்கு, ஆலடியூர் பெருங்குளம், நடூர் பெருங்குளம், ஓடையடியூர் பெருங்குளம், பதுவை நகர், வடக்கூர், 

பரமன்குறிச்சி கஸ்பா, பிள்ளையார் கோவில் தெரு, வள்ளியம்மாள்புரம், செம்மறிகுளம், நல்லூர், வடக்கு நல்லூர், நாககன்னியாபுரம், காயல்பட்டிணம் நகராட்சி, கே.டி.எம்.தெரு, கொச்சியார் தெரு, குத்துக்கல் தெரு, கீழசண்முகபுரம், கீழநாவ்வலடிவிளை, பாரதி நகர், ஆறுமுகநேரி, மாணிக்கவாசகபுரம், இம்மானுவேல் தெரு, நாசரேத், வடக்கு ஆத்தூர், குரும்பூர், காந்திநகர், மூக்குப்பேறி, மெர்ச்சன்ட் நகர், பாட்டாக்கரை, நல்லூர், நடுவக்குறிச்சி, கொம்பன்குளம், கலுங்குவிளை, தாமஸ் நகர், எஸ்.எஸ்.நகர், பெருமாள்பட்டி, சிவஞானபுரம், கழுகாசலபுரம், இராமநாதபுரம்,மார்த்தாண்டபட்டி, கூத்தலூரணி, கல்லூரணி, முத்துக்குமாரபுரம், குமரெட்டியாபுரம், வீரன் சுந்தரலிங்கம்நகர், ரகுராமபுரம், கம்பத்துபட்டி, எஸ்.பச்சையாபுரம் ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory