» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தடுப்பூசி கொள்கை : பிரதமர் மோடிக்கு எதிராக மனு அனுப்பும் போராட்டம்

வியாழன் 10, ஜூன் 2021 5:28:12 PM (IST)கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தடுப்பூசி கொள்கையை கைவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட சிஐடியு சார்பில பிரதமர் மோடிக்கு மனு அனுப்பப்பட்டது. 

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத பிரதமருக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்திட சிஐடியு அகில இந்திய கமிட்டி முடிவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டமும் பிரதமருக்கு கோரிக்கை மனுவை தூத்துக்குடி வட்டாட்சியர் வழியாக இந்திய பிரதமருக்கு மகஜர் கொடுக்கப்பட்டது.

பிரதமருக்கு அனுப்பிய மனுவில் கோரிக்கைகள் வருமாறு : பெருகி வரும் கரோனாவை எதிர்கொள்ள போதுமான மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் இதர மருத்துவ வசதிகள் உறுதிப்படுத்த வேண்டும். பாரபட்சமான கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தடுப்பூசி கொள்கையை கைவிட வேண்டும். தேவையான சுகாதார ஊழியர்களை நியமனம் செய்து பொது சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது தொழில்நிறுவனங்களில் ஆட்குறைப்பு, ஊதிய வெட்டு, குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தடைசெய்யப்பட வேண்டும்  தொழில் ரீதியான பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத் தொகுப்பில் மாநிலங்களுக்கிடையே  இடம் பெயரும் தொழிலாளர் சட்டம் 1979 ஐ இணைத்ததை ரத்து செய்ய வேண்டும்.

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள், மக்கள் விரோத வேளாண் சட்டங்கள், மின்சாரம் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும். தேசத்தின் சொத்துக்களான பொதுதுறைகளை தனியார்மயம்,மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.  வருமான வரி செலுத்தாத அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 ரொக்கமாக நிவாரணம் வழங்க வேண்டும்.  

அடுத்த  6மாதங்களுக்கு 10 கிலோ இலவச உணவு தானியம் ஒவ்வொரு நபருக்கும் மாதாமாதம் வழங்க வேண்டும்  கரோனா அல்லாத நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் நேர்த்தியான சிகிச்சை வழங்கிட வேண்டும். ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர் உட்பட அனைத்து கரோனா முன்களப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு கவச உடை, மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதை உறுதிப் படுத்த வேண்டும்"என கோரிக்கை விடுத்தனர்

இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ஆர் ரசல் மாவட்ட தலைவர் ஆர் பேச்சிமுத்து சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பொன்ராஜ் டென்சிங் டி முனியசாமி ராமமூர்த்தி காசி மாவட்ட குழு உறுப்பினர்கள் கருப்பசாமி சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

மதுவதனராஜ்Jun 11, 2021 - 04:56:34 PM | Posted IP 162.1*****

பாராட்டி வாழ்த்துவோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory