» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் பொருட்கள் குறித்து புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் திறந்து வைத்தார்!!

வியாழன் 10, ஜூன் 2021 5:07:43 PM (IST)நெல்லையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்து, புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறையினை  ஆட்சியர் வே.விஷ்ணு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் முன்னிலையில், நியாய விலைக்கடைகளில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் மற்றும் குடும்ப அட்டைகளில்;; ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க புதிதாக உருவாக்கப்பட்ட பொது விநியோக சிறப்பு கட்டுப்பாட்டு அறையினை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10-06-2021) தொடங்கி வைத்தார்கள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்து புகார்களை தெரிவிக்க, பொது விநியோக சிறப்பு கட்டுபாட்டு அறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலக பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டுப்பாட்டு அறையில் கணினி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர், என 3 அலுவலர்கள் பணியாற்றுவார்கள். இக்கட்டுப்பாட்டு அறை வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். 

இக்கட்டுபாட்டு அறைக்கு வரும் புகார்கள் தனி பதிவேடு மூலம் புகார்கள் பதிவு செய்யப்பட்டு அதற்கு தீர்வு கானப்படும். இக்கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும்;;. இக்கட்டுப்பாட்டு அறையின் நோக்கம் பொதுமக்களுக்கு நியாய விலைக்கடைகளில் உரிய பொருட்கள் முறையாக கிடைத்திடவும,; குடும்ப அட்டை தொடர்பான புகார்களையும் அது தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்து வைப்பதற்காகவும் இக்கட்டுப்பாட்டு அறை மிகவும் உதவியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் தங்களது குறைகளை, பொது விநியோக சிறப்பு கட்டுபாட்டு அறை எண்: 9342471314 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, வாட்ஸ்அப் செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்; மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory