» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் சார்பில் ரூ.1கோடி நிவாரண நிதி : தமிழக முதல்வரிடம் வழங்கல்!

வியாழன் 10, ஜூன் 2021 3:47:25 PM (IST)தூத்துக்குடி -  நாசரேத் திருமண்டலம் சார்பில் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1கோடி வழங்கப்பட்டது. 

கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்க நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். பல்வேறு தரப்பினரும் கரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி -  நாசரேத் திருமண்டலம் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண‌ நிதிக்கு  1 கோடிக்கான காசோலையினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  பேராயர் தேவசகாயம் வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி -  நாசரேத் திருமண்டலம் லே-செயலர் எஸ்டிகே ராஜன், ஆடிட்டர் ஜெபச்சந்திரன்  மற்றும் திருமண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jun 10, 2021 - 07:17:30 PM | Posted IP 173.2*****

பிஷப் ஸ்டாலின்கிட்ட என்ன சொல்லியிருப்பாருன்னா.... அய்யா... ஸ்டாலின் அய்யா... கடந்த 10 வருஷத்துல அரசாங்கம் போட்ட எந்த உத்தரவையும், சட்டத்தையும் பத்து பைசாவுக்கு கூட மதிக்காம டயோசிசன் காலேஜ், ஸ்கூல்ல ஏகப்பட்ட அப்பாயின்ட்டென்ட்ட பத்து லட்சம் வரைக்கும் வாங்கிட்டு போட்டு வுட்டுட்டேன்யா... சம்பளம் வராததுனால துட்டு குடுத்தவன் நான் எல்லாம் போற எடத்துலல்லாம் விரட்டி விரட்டி அடிக்க வரான்கய்யா... நீங்கதான் இந்த 1 கோடிய வச்சிக்கிட்டு, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, சிறுபான்மையினர் கோட்டாவுல அவங்களுக்கு சம்பளத்த சாங்சன் பண்ணி வுடணும்..... அப்போதான் இன்னும் ஏகப்பட்ட அப்பாயின்ட்மென்ட்ட போட்டு வுட்டு பல கோடி தேத்த முடியும். கொஞ்சம் தயவு பண்ணுங்கய்யா... இந்தாங்க 1 கோடி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory