» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக நிவாரண பொருட்களை எஸ்பி ஜெயக்குமார்

வியாழன் 10, ஜூன் 2021 3:22:34 PM (IST)கோவில்பட்டியில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கரோனா நிவாரண பொருட்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிதம்பரநாடார் காமாட்சியம்மாள் திருமண மஹாலில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கரோனா ஊரடங்கை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 125 பேருக்கு அரிசிப்பை, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற நிவாரண பொருட்களை மாவட்ட  இன்று ஜெயக்குமார் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசு அறிவித்துள்ளவாறு 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வரும் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் செய்திருந்தனர். 

இதில் தமிழன்டா கலைக்கூடம் மாநில செயலாளர் கதிர்வேல், மாநில பொருளாளர் பிரம்மராஜ், மகளிர் அணி அமைப்பாளர் மாரியம்மாள், கலைக்குழு உறுப்பினர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thoothukudi Business Directory