» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: இளைஞா் கைது

வியாழன் 10, ஜூன் 2021 11:36:29 AM (IST)கழுகுமலையில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அண்ணா புது தெருவில் உள்ள வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கழுகுமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் சோபா ஜென்சி தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி, காவலர் முத்துராமன், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து பாா்த்த போது அங்கு சுமாா் 437கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் சுரேஷ் கண்ணன் (35) பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சுமாா் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த கழுகுமலை காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

 இதுவரை 77 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது 

மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 685 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 687 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிமிருந்து 3800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர்கள்.

எனவே இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா போன்றவற்றை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர்கள் மற்றும் சட்டவிரோதமாக கள் இறக்குவது, சாராயம் காய்ச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபவர்கள் யாராக இருந்தாலும் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இதில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக் கதிரவன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory