» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவர் ஒரு மாத சம்பளத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்கல்

வியாழன் 10, ஜூன் 2021 8:28:55 AM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவர் தனது ஒரு மாத சம்பளம் முழுவதையும் தமிழக அரசுக்கு கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

கரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தரவும், உரிய நிவாரணங்களை வழங்க நிவாரண நிதியை தாராளமாக வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். பல்வேறு தரப்பினரும் கரோனா நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு மற்றும் முடநீக்கியியல் துறை உதவி பேராசிரியராக உள்ள டாக்டர். வி. ஜேம்ஸ் சுந்தர்  சிங் தனது ஒரு மாத சம்பளம் முழுவதையும் தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து டாக்டர்.வி.ஜேம்ஸ் சுந்தர் சிங் காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், டாக்டருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு, மருத்துவ பணிகளின் சேவையையும் பாராட்டினார். இந்த சந்திப்பின்போது சாமுவேல் ஜெபராஜ் மற்றும் ரூபன் ஜெபசிங் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory