» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கணவருடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி பெண் பலி

வியாழன் 10, ஜூன் 2021 8:18:12 AM (IST)

கயத்தாறில் கணவருடன் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மனைவி லட்சுமி (50). விவசாயி. இருவரும் கோவில்பட்டி மந்தித் தோப்புக்கு சென்றனர். சம்பவத்தன்று அங்கிருந்து மோட்டார் பைக்கில்  இருவரும் கயத்தாறில் உள்ள வீட்டிற்கு நாற்கர சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது நாற்கர சாலையில் கரிசல்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது,  திடீரென லட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. 

இதனால் இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்குசாமி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று லட்சுமி பலியானார். இறந்துபோன லட்சுமிக்கு காளிராஜ், சொர்ணராஜ், மகேந்திரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory