» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

புதன் 9, ஜூன் 2021 4:56:51 PM (IST)தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3 வது தெரு நடுப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக சாக்கடை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் சாக்கடை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத் தொல்லை, சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனே சாக்கடை பிரச்சினையை சரிசெய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

Jun 9, 2021 - 08:04:35 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி அமைத்த பாதாள சாக்கடை தான் காரணம்..

எங்க ஏரியாJun 9, 2021 - 08:03:38 PM | Posted IP 162.1*****

மாநகராட்சி பாதாள சாக்கடை அமைத்தால் அதை விட பெரிய சீர்கேடு , சாக்கடை பல ஆண்டுகளாக தேங்கி இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory