» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின் கட்டணம் 5 மடங்கு அதிகமாக வசூல் : பொதுமக்கள் அதிருப்தி!

புதன் 9, ஜூன் 2021 11:00:50 AM (IST)

தூத்துக்குடியில் மின் நுகர்வோர்களிடம் 5 மடங்கு வரை கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

கரோனா ஊரடங்கு காரணமாக, வீடு வீடாக சென்று மின் பயன்பாட்டு கணக்கீடு செய்யும் பணி நடக்கவில்லை. இதனால், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்தது. 

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மின் கணக்கீட்டுப் பணி துவங்கியுள்ளது. அதில், பலருக்கும் மின் கட்டணம் வழக்கத்தை விட 4 முதல் 5 மடங்கு வரை கட்டணம் அதிகம் வந்தது. இதனால், மின் கணக்கீட்டில் குளறுபடி நிலவுவதாகவும், கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விமர்சனம் எழுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி கே.வி.கே., நகரைச் சேர்ந்த சிவராம் இவர் தனது மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி வந்துள்ளார். கடந்த முறை ரூ.740 மின்கட்டணம் செலுத்தியுள்ளார். தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக கணக்கீட்டு பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக மின் கட்டணம் ரூ.3628 மிண்கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தூத்துக்குடி மேற்கு மின்வாரிய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டும், இந்த ஆண்டும் மின் கணக்கீடு பணிகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் 2019-ல் இதே மாதத்தில் கட்டிய தொகையை அனுப்பியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். தற்போது அதிகப்படியாக 5 மடங்கு அதிகமாக கட்டணம் வந்துள்ளதால் பணம் கட்டமுடியாதவர்கள் என்ன செய்வது என்று கேட்டபோது, "நீங்கள் முழுத் தொகையும் செலுத்தினால் அந்த பணம் டெபாசிட்டாக ஏற்றுக் கொள்ளப்படும். கட்ட இயலவில்லை என்றால் தற்போதுள்ள கணக்கீட்டு விபரத்தை குறித்து அலுவலகத்தில் பதிவு செய்தால் அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்" என்றார். 

தற்போது கரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் வருமானத்தை இழந்து கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளனர். இதனால் மின் கட்டணத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், 5 மடங்கு வரை அதிகமாக  மின் கட்டணம் வசூலிக்கப்படுவது மக்களிடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

indianJun 9, 2021 - 07:49:16 PM | Posted IP 162.1*****

Vedial Arasu

adaminJun 9, 2021 - 03:31:47 PM | Posted IP 108.1*****

veedu veeda poi reading edukka enna kora. manusangalaya paaka poranga. meter ah pathu reading eluthittu vara poranga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory