» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2பேர் கைது : 3 இளம்பெண்கள் மீட்பு!

புதன் 9, ஜூன் 2021 10:44:25 AM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் பெண் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரத்தில் ஒரு வீட்டில் ட்ருமேன் மனைவி ஜூலியட் (40) மற்றும் தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (38) ஆகிய இருவரும் மதுரை, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. 

உடனே தனிப்படை போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்கள் 3 பேரையும் மீட்டு பாதுகாப்பாக தூத்துக்குடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு காப்பகத்தல் ஒப்படைத்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து

adaminJun 9, 2021 - 03:32:42 PM | Posted IP 108.1*****

ulakam pollathathu. summa pona kooda vida matranga tamilnadu kerala andhra nu kaiya pidichu ilukuthupa.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory