» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதல் மனைவியை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது!

புதன் 9, ஜூன் 2021 10:25:26 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே குடும்பத் தகராறில் காதல் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம்,  செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சந்தையடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகராஜா (24), இவரது மனைவி ராஜலட்சுமி (23),  இந்த தம்பதியர் கடந்த 2 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு வயதில் ஆண்குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகராஜா மனைவி ராஜலட்சுமியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜலட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், செய்துங்கநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்த முத்துராமன் வழக்குப் பதிந்து மகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

adaminJun 9, 2021 - 03:33:21 PM | Posted IP 108.1*****

ayyo pavam. love muthiduchu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory