» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக ஆட்சியை100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் : கடம்பூர்.செ.ராஜீ எம்எல்ஏ பேட்டி

செவ்வாய் 8, ஜூன் 2021 3:48:57 PM (IST)

பொறுப்பேற்று 30 நாட்களுக்குள் திமுக ஆட்சியை விமர்சிப்பது சரியாக இருக்காது என முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியுள்ளார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சொல்கின்ற கருத்துகள் தான் எங்களுடைய கருத்து. சசிகலா அதிமுகவில் தற்பொழுது இல்லை, தேர்தல் நேரத்தில் கூட சசிகலா அதிமுகவிற்கு சாதகமாக இல்லை. 

இந்த நிலை அனைத்து தொண்டர்களுக்கு தெரியும், இதில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கிற முடிவு தான்.  திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 30 நாள்கள் தான் ஆகிறது. 30நாள்களில் ஆட்சியை விமர்சனம் செய்வது சரியான எதிர்க்கட்சிக்கு அடையாளமாக இருக்காது.மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கினை அமுல்படுத்தி தான் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. வழக்கமாக நடைபெறும் பணிகள் இன்னும் நடைபெறவில்லை, ஆட்சிக்கு வந்ததும் 100 நாள்களில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று திமுக கூறியுள்ளது. 

எனவே 100 நாள்கள் பொறுத்திருந்து பாப்பதுதான் சிறந்த எதிர்கட்சியின் கடமை, ஒரு இலக்கணமாக இருக்கும். 100நாள்கள் கடந்த பின்னர் அரசின் நடவடிக்கைகளை பொறுத்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு இருக்கும்.திமுக எதிர்கட்சியாக இருந்த கருத்துகளை ஆளும்கட்சியாக வந்த பின்னர் கூறினால் சரியாக இருக்காது,தமிழகம் எல்லாதுறையிலும் பின்னோக்கி இருந்ததாக திமுக தெரிவித்து இருந்தது.நேற்று வந்த புள்ளி விபரத்தின் படி பள்ளிகல்வி துறையில் தரவரிசைப்படி A++ என்ற இடத்தினை பெற்று தமிழகம் தான் இந்தியாவில் முதன்மை மாநிலம் என்ற இலக்கினை அடைந்துள்ளது. 

இது திமுக 30நாள்களில் வந்து செய்த சாதனை கிடையாது. கடந்த 10ஆண்டுகளாக ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பணியாற்றியதன் விளைவாக தான் பள்ளிகல்விதுறை தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம்.மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் அனைத்து எதிர்கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். அதை நாங்கள் வரவேற்பது மட்டுமின்றி நாங்களும் அந்த நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான்.

அந்த பண்போடு இருக்கின்ற காரணத்தினால் தான் அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர்.பொதுமக்களை காக்கும் கடமை அனைவருக்கும் உள்ளது. அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது சிறப்பாக செய்தோம், இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருந்தோம்.கடந்த கொரோனா தாக்கத்தின் போது தமிழக அரசு செய்த பணிகளை பிரதமர் பாராட்டினார்.தற்பொழுது உள்ள ஆளும் கட்சி அது போன்று செயல்பட வேண்டும் நாங்களும் இணைந்து பணியாற்ற தயராக உள்ளோம் என்றார்


மக்கள் கருத்து

ArumaiJun 8, 2021 - 05:24:55 PM | Posted IP 173.2*****

யாரு இது! தெர்மோகோல் விஞ்ஞானியா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory