» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி

திங்கள் 7, ஜூன் 2021 4:49:49 PM (IST)தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. 

இது குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் ஆலையில் இன்று வரை 500 மெட்ரிக் டன் உற்பத்தி என்னும் மைல் கல்லை எட்டியுள்ளோம். கரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இதுவரை மொத்தம் 542.92 மெட்ரிக் டன் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜன், மற்றும் 265 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வாயு சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்ட்படுள்ளது. 

மருத்துவ ஆக்ஸிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, நமக்கல், கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், தென்காசி, தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், கருர், சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க்படப்டுள்ளது. இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய எங்கள் சமூக உறுப்பினர்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் வணிக கூட்டமைப்பினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது. 


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jun 7, 2021 - 09:22:07 PM | Posted IP 108.1*****

ஸ்டெர்லைட்டுக்கு பல நன்றி .இது ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியது. எங்கள் கடவுள் ஸ்டெர்லைட்டைக் காப்பாற்றட்டும்.🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory