» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆன்லைன் ரம்மி குடும்பத்தையே சீர்குலைத்துவிடும்: காவல்துறையினருக்கு எஸ்பி அறிவுரை!!

செவ்வாய் 1, ஜூன் 2021 3:34:15 PM (IST)



ஆன்லைன் ரம்மி விளையாடுவது குடும்பத்தையே சீர்குலைத்து விடும் என காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கரோனா வைரஸ் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.

இதில் எஸ்பி  பேசுகையில் "கரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், அதன் தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்று வழி தடுப்பூசிதான், இந்த நேரத்தில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பது அரசின் நோக்கம், தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக கரோனா தொற்று வருவதில்லை, அப்படியே தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினர் அனைவரும் தடுப்பூசி போட்;டுக்கொள்ள வேண்டும். 

பணிக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், 2 முககவசங்கள் அணிந்து கொள்வது சிறந்தது, அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும,; மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தவும். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது குளித்துவிட வேண்டும் ஏனென்றால் உங்கள் மூலம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது இவற்றை சில காலங்கள் நாம் கடைபிடித்தால் தான் கரோனா வைரஸை வெல்ல முடியும்.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், முக்கியமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க வேண்டும் ஆன்லைனில் பணத்தை இழந்து சில காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வது நடந்து வருகிறது இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம், தயவு செய்து நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள், புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செந்தாமரைகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam







Thoothukudi Business Directory