» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் சிமெண்ட் பூச்சுபெயர்ந்து விழுந்து இளம்பெண் பலி: சகோதரர் படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்!!

செவ்வாய் 1, ஜூன் 2021 8:31:22 AM (IST)தூத்துக்குடியில் வீட்டின் சிமெண்ட் பூச்சுபெயர்ந்து விழுந்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7வது தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டு வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்துடன் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார், இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர். பரமேஸ்வரி, பிஇ முடித்துள்ளார். அந்தோணியார் புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சுந்தர் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், ராஜமுருகன் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம்  4 வருடங்களுக்கு முன்பு சேதமடைந்தது, அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன் கொத்தனார் மூலம் சீர் செய்திருக்கிறார். இந்நிலையில் சிமெண்ட் பூச்சு நேற்று நள்ளிரவில் பெரிய அளவில் பெயர்ந்து விழுந்தது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரி மற்றும சுந்தர் மீது சிமென்ட் பூச்சி விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், செல்லும் வழியில் பரமேஸ்வரி உயிரிழந்தார். படுகாயமடைந்த சுந்தருக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறது. 

எஸ்பி நேரில் விசாரணை 

சம்பவம் நடந்ததையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உடனடியாக நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.  மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ்க்கு உத்தரவிட்டார். இது குறித்து வடபாகம் காவல் ஆய்வாளர் அருள் வழக்குப்பதிவு செய்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தர் சிங், தனிப்பிரிவு தலைமைக் காவலர் நாகராஜன், இரவு ரோந்து போலீசார் உட்பட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory