» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் : வருவாய் நிர்வாக ஆணையர் ஆய்வு

சனி 29, மே 2021 5:01:32 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி,  ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி,  இன்று (29.05.2021) ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும், இதில் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகள், ஐ.சி.யு. படுக்கை வசதிகள் குறித்தும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கரோனா பாதுகாப்பு மையங்கள், சித்த மருத்துவ கரோனா பாதுகாப்பு மையங்கள் குறித்தும் அரசு மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், திரவ ஆக்சிஜன் வழங்குவது குறித்தும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு குறித்தும் தெரிவித்தார்கள். 

மேலும், தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் குறித்தும், கரோனா பாதிப்பு குறித்தும், காய்;ச்சல் முகாம்கள் மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்தும், கிராமப்பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசி போடுவது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார்.

இக்கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி,  தெரிவித்ததாவது: ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி போடும் பணிகளை விரைiவுப்படுத்த வேண்டும். குறிப்பாக மில் தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகளை விரைந்து போட வேண்டும். வீட்டு தனிமையில் உள்ள கரோனா தொற்று உள்ளவர்களை மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் கண்காணிக்க வேண்டும். 

சித்த மருத்துவ முறையில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்படுவதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுவரை சித்த மருத்துவ சிகிச்சை கரோனா பாதுகாப்பு மையத்தில் 30 சதவிதம் உள்ளனர். இதை அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசிகளும் தேவையான அளவில் பெற்று போட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கரோனா பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார் ரூம்மை வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்திர ரெட்டி,  பார்வையிட்டார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஷரண்யா அறி,  சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) முருகவேல், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு, தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பாவலன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, நகராட்சி ஆணையர்கள் ராஜாராம்(கோவில்பட்டி), சுகந்தி (காயல்பட்டிணம்), பேரிடர் வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory