» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரபல ஜவுளி கடைகளுக்கு சீல்வைப்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!!

புதன் 5, மே 2021 11:10:55 AM (IST)


தூத்துக்குடியில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இயங்கியதாக பிரபல ஜவுளி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். 

தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவில் உள்ள கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில கடைகள் விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல ஜவுளிக் கடையில், ஷட்டரை பாதியளவு திறந்து விற்பனை நடந்துள்ளது. இதுகுறித்து தகவலின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு நடத்தியதில் கடைக்குள் 150க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஜவுளிக் கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து கடையை மூடி சீல் வைத்தனர். 

இதுபோல் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடை கரோனா பாதுகாப்பு விதிகளை மீறி இயங்கி வந்தது.  இதுகுறித்து புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு 200க்கும் மேற்படட ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து கடையை மூடி சீல் வைத்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். மக்கள் கருத்து

பாவம்மே 6, 2021 - 09:22:12 AM | Posted IP 108.1*****

பிழைக்க வந்த மக்களுக்கு வயிற்றில் அடிக்காதீர்கள் .

Makkalமே 6, 2021 - 07:27:21 AM | Posted IP 162.1*****

அப்படியே ராணி ஸ்டோரையும் பாருங்கய்ய கட்டுக்கடங்கா கூட்டம் இங்கு வருபவர்களுக்கு நோய் தொற்று உறுதி

Tuti makkalமே 5, 2021 - 10:58:54 PM | Posted IP 108.1*****

Big cloth store near south police station functioning through jewellary shop enterence

ஜெபசிங்மே 5, 2021 - 07:19:11 PM | Posted IP 162.1*****

GOVT STAFF IKU OFF SALARY PODUINGA

tamilanமே 5, 2021 - 12:15:41 PM | Posted IP 108.1*****

thoothukudiyil prabala supermarketum pin pakkam valiyaga seyalpaduvathu theriyatha?

Srinivasanமே 5, 2021 - 12:01:47 PM | Posted IP 108.1*****

correct and good

adminமே 5, 2021 - 11:28:03 AM | Posted IP 108.1*****

என்னைய கேட்டா அவன் அவன., அவன் போக்குல விட்டுறணும். செத்தா சாவட்டும்னு. இப்போ பொருளாதாரம் பாதிக்குதுன்னு மன வருத்தம் எல்லாருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory