» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பியின் காதல் விவகாரத்தில் அண்ணனுக்கு வெட்டு : வாலிபர் கைது!!

புதன் 5, மே 2021 10:30:51 AM (IST)

தூத்துக்குடியில் தம்பியின் காதல் விவகாரத்தில் அண்ணனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி விஸ்வபுரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருக்கு கணேஷ்குமார் (23), கொம்பையா (20) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கொம்பையா, ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தாரம். இவர்களது காதலுக்கு அந்த பெண்ணின் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொம்பையாவை கொலை செய்வதற்காக அரிவாளுடன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது கொம்பையா அங்கு இல்லாதால் அவரது அண்ணன் கணேஷ் குமாரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கணேஷ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் பொன் இசக்கி (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam





Black Forest Cakes

Thalir Products




Thoothukudi Business Directory