» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேலையில்லாத விரக்தியில் வாலிபர் தற்கொலை!

புதன் 5, மே 2021 10:18:31 AM (IST)

விளாத்திக்குளம் அருகே சரியான வேலை மற்றும் வருமானமின்றி வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள புதூர் அருணாசலம் காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் மாரிமுத்து (27). இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். மாரிமுத்து விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார். தற்போது சரியான வேலையில்லாததால் வருமானமின்றி தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory