» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆக்சிஜன் உற்பத்திக்கான ஏற்பாடுகள் தயார் : ஸ்டொ்லைட் நிா்வாகம்

புதன் 5, மே 2021 8:54:41 AM (IST)

தமிழக அரசு மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை தீா்க்கும் வகையில், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அம்மனுவில், ஸ்டொ்லைட் ஆலையில் தினமும் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலை உள்ளதாகவும், அதனை செயல்பட அனுமதித்தால் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, மத்திய, மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட உச்சநீதிமன்றம் ஸ்டொ்லைட் ஆலையில் 3 மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தியை செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, ஸ்டொ்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். எனினும், இதுவரை மின்இணைப்பு வழங்கப்படவில்லை.

ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஒரு தரப்பினும், உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஓரிரு நாள்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு தற்போது தயாா் நிலையில் உள்ளது. அரசு மின் இணைப்பு வழங்கியதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளை தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory