» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பூட்டிய வீட்டில் ஆண் சடலம் : போலீசார் விசாரணை

புதன் 5, மே 2021 8:41:52 AM (IST)

கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் தூக்கில் பிணமாக கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் முதல் தெருவில் உள்ள வீட்டில் இருந்து தூா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அங்கு சென்று பாா்த்தனா். வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது தூக்கில் சுமாா் 52 வயது மதிக்கக் கூடிய ஆண் பிணமாக இருந்தது தெரியவந்தது. 

போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இறந்து கிடந்தவா், அதேபகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் காளிராஜ் வீட்டில் கடந்த ஏப். 7 ஆம் தேதி முதல் வாடகைக்கு குடியிருந்து வந்தாராம். அதேபகுதியைச் சோ்ந்த செண்பகம் மகன் லட்சுமணன் தெரிவித்ததன்பேரில் அவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்ததாகவும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவில்லை என காளிராஜ் போலீசார் புகாா் அளித்தாா். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory