» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பத்திரிக்கையாளர் சங்கம் வரவேற்பு

செவ்வாய் 4, மே 2021 5:29:38 PM (IST)

பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் வரவேற்றுள்ளது. 

மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.

கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பத்திரிக்கையாளர் சங்கம் வரவேற்பு 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி ஆர். முருகன் வெளியிட்ட அறிக்கையில், பத்திரிக்கையாளர் நலன் சார்ந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொ்கிறோம். மேலும் பத்திரிக்கையாளர்களின் முக்கிய கோரிக்கையான பத்திரிக்கையாளர் நலவாரியம் விரைவில் அமைக்க திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Thalir Products


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory