» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரும்பு கம்பியால் தாக்கி டீ வியாபாரி கொலை: ரயில் நிலையம் அருகே பயங்கரம்

செவ்வாய் 4, மே 2021 4:40:37 PM (IST)கோவில்பட்டியில் ரயில் நிலையம் அருகே முன் விரோதத்தில் டீ வியாபாரி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் சுடலை பாண்டி (52). இவர் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் டீ வியாபாரம் செய்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலைபார்த்து வந்த கோவில்பட்டி செண்பகா நகரைச் சேர்ந்த வேலு மகன் முத்துப்பாண்டி (49) என்பவரை முன் விரோதம் காரணமாக சுடலை பாண்டி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பகை இருந்துள்ளது. 

இந்நிலையில் இன்று இன்று மதியம் 2.30 மணியளவில் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துபாண்டி  அங்கு கிடந்த இரும்பு கம்பியால் சுடலை பாண்டியை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப் பதிந்து, முத்துப்பாண்டியை கைது செய்தார். சம்பவ இடத்தை டிஎஸ்பி கலைக்கதிரவன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

adminமே 4, 2021 - 06:43:13 PM | Posted IP 108.1*****

pera pathale theriyuthu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory