» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 5பேர் கைது: பைக், லேப்டாப், செல்போன்கள் மீட்பு!

செவ்வாய் 4, மே 2021 3:19:48 PM (IST)தூத்துக்குடியில் 8 இடங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக  திருட்டு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தலைமை காவலர் பென்சிங், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாணிக்கராஜ், தெர்மல்நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

தனிப்படையினர் சம்பவ இடங்கள் மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த லேயோன் மகன் மரியக்கண் ஜென்ஸ்டன் (20) மற்றும் 15, 16 வயது மதிக்கதக்க நான்கு இளஞ்சிறார்கள் ஆகியோர் சேர்ந்து கடந்த 28.04.2021 அன்று அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கோயில் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 29.04.2021 அன்று முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து 10ஆயிரம் ரூபாய், பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 

30.04.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகை, மடிக்கணினி, செல்போன் மற்றும் 3ஆயிரம் ரூபாய், லயன்ஸ் டவுண் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ரூபாய் 7,120, இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம், 01.05.2021 அன்று கால்டுவெல் காலனி பகுதியில் வீடு புகுந்து செல்போன் மற்றும் இந்திரா நகர் பகுதியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து மரியக்கண் ஜென்ஸ்டன் மற்றும் நான்கு இளஞ்சிறார்களை தனிப்படையினர் கைது செய்து மொத்தம் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள், மடிக்கணினி மற்றும் 7 செல்போன்களை கைப்பற்றினர். பல பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்களை தீவிர விசாரணை மேற்கொண்டு விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.


மக்கள் கருத்து

ஒருவன்மே 4, 2021 - 07:02:24 PM | Posted IP 162.1*****

குற்றவாளிகள் மூஞ்சை செய்தியில் படத்தை போடுங்க பொதுமக்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் ..

adminமே 4, 2021 - 06:43:51 PM | Posted IP 108.1*****

athellam ilanjiraar illa. pudichu ulla podunga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory