» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டு

செவ்வாய் 4, மே 2021 3:10:29 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற வந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட அப்பு (எ) அப்பன்ராஜ் என்பவரை கண்டுபிடித்து வழக்கில் ஆய்வாளர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் மகாராஜா, சரண்யா, தலைமை காவலர்கள் உமாமகேஷ்வரி, ஆறுமுக கண்ணன், முதல் நிலை காவலர்கள் பாலகுமாமார், சுந்தர்சிங், காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி நகரத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுபடுத்தும் பொருட்டு தனிப்படையினர் கடந்த 30.04.2021 அன்று காலை தூத்துக்குடி உழவர் சந்தை அருகே ஒரு காரில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகள் கூட்டு கொள்ளையில் ஈடுபட தயாராகி கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் வாகனத்தை கைப்பற்றி கூட்டு கொள்ளை நடவாமல் தடுத்த தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தலைமை காவலர் பென்சிங், வடபாகம் முதல் நிலை காவலர் மாணிக்கராஜ், தெர்மல்நகர் நிலை காவலர் சாமுவேல், வடபாகம் காவல் நிலைய காவலர் மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன், முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 03.03.2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரிகள் கருத்தப்பாண்டி, சங்கரபாண்டி ஆகியோர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, தலைமை காவலர் சண்முகநாதன், காவலர் தென்கரை மகாராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 30.04.2021 அன்று குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுக்குவாய்த்தான் பகுதியை சார்ந்த பல மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சதீஷ் (எ) சத்திய முகேஷ் என்பவரை மணல் திருட்டு வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த ஆழ்வார்திருநகரி ஆய்வாளர் ஜூடி, உதவி ஆய்வாளர் தாமஸ், தலைமை காவலர் ஜேசுராஜா ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 23.04.2021 அன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குகல்மேடு பகுதியில் சுமார் 25 வயது முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தீயில் எரிந்து போன நிலையில் சந்தேகத்திற்கிடமாக கிடந்த அப்பெண்ணை துரிதமாக அடையாளம் கண்டுபிடித்து மேலும் அப்பெண்ணை கொலை செய்த 6 எதிரிகளில் 4 எதிரிகளை துரிதமாக கைது செய்த தருவைகுளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் சோலைபெருமாள், முதல் நிலை காவலர் ஆலோசனை சுரேஷ், காவலர் பொன்குமார் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 12.04.2021 அன்று குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் மேலாளரிடம் பணம் ரூபாய். 6,13,220/- ஐ கொள்ளையடித்த குற்றவாளிகளை சி.சி.டி.வி கேமரா மூலம் கண்டுபிடித்து எதிரிகளை கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கொள்ளையடித்த பணத்தில் வாங்கிய கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்பசாமி, தலைமை காவலர் வடிவேல், முதல் நிலை காவலர்கள் முத்துசேகர், செல்வகுமார் மற்றும் இராசையா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற செயின்பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட வழக்கின் எதிரிகளை திருநெல்வேலி சென்று கைது செய்து அவர்களிடமிருந்து தங்கசெயினை மீட்ட முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாராபர்ட், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இம்மானுவேல் ஜெயசேகர், முறப்பநாடு காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாரியப்பன், பெரும்படையான், சுரேஷ், காவலர் சதீஷ் தணிகைராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்சோ வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கின் விசாரணையை முடித்து எதிரிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 6,000/- அபராதமும் பெற்று தந்த தருவைகுளம் காவல் நிலைய காவலர் அந்தோணி செல்வன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 40 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இப்பாராட்டு நிகழ்ச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் சைபர் குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory